தமிழினத்தைக் காப்பாற்ற ஒருவரால்தான் முடியும். அவர்...!
தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும் என்று தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது.
எல்லா விதமான போராட்டங்களையும் நடத்தியாகி விட்டது. இன்னமும் உலகின் கண்கள் திறக்கப்படவில்லை. இந்தியா உதவி செய்யும். கருணாநிதி உதவி செய்வார். பிரணாப் உதவி செய்வார் என்று நம்பினோம். தமிழக அரசியல்வாதிகளை நம்பினோம். அவர்கள் காலையில் ஒன்று பேசுகிறார்கள். மாலைக்குள் மாறி விடுகிறார்கள்.
ஐ.நா. சபை தலையிட்டு காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும், காப்பாற்றும் என நினைத்தோம். எதுவும் நடக்கவில்லை. எல்லோரும் கழுத்தை அறுத்தார்கள். இப்போது ஒபாமாவிடம் போய் நிற்கிறோம். இவர்கள் மனது மாறி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.
பிறகு யாரால்தான் முடியும். தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும்.
5000 யானைகள், 1 இலட்சம் பேரைக் கொண்ட இப்ராஹிம் லோடியின் படையை பானிபட் போரில் வெறும் 15,000 பேரைக் கொண்டு ஒரே நாளில் வெற்றி பெற்றார் பாபர். வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒப்பாரிச் சத்தம் கேட்டது. பாபர் தன் சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் 'எல்லாம் வல்ல இறைவன் அருளால் காலையில் தொடங்கிய யுத்தம் மலைக்குள் முடிவுக்கு வந்தது. இந்தியாவும் எனக்குக் கிடைத்தது'. மன உறுதி மற்றும் போர் தந்திரத்தினால்தான் இது சாத்தியமானது.
வன்னியில் இப்போது 50,000 இராணுவத்தினர் முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராடுவதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை. தமிழகத்தில் வாழ்நாளில் போரை இது வரை பார்த்திராத இளைஞர்கள் 11 பேர் தீக்குளித்து உயிரை விட்டிருக்கிறார்கள். வன்னியில் தினமும் செத்து செத்து மடிவதை விட போரை சந்தித்து வெற்றி பெறுவது அல்லது வீர மரணம் அடைவதே மேல். அதை விடுத்து 'அவர் வந்து காப்பாற்றுவார்', 'இவர் வந்து காப்பாற்றுவார்' என்று நினைத்து அழுது கொண்டிருந்தால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.
புதுக்குடியிருப்பில் சிக்கிக் கொண்டுள்ள 3 இலட்சம் பேரில் 25,000 பேர் வந்தால் போதும். வன்னி மக்களுடைய குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் புறப்பட்டால் போதும். தலைவருடைய கரங்களை பலப்படுத்தினால் போதும். சிங்களத்தின் பிடரியில் அவர் பேரிடி தருவார். வெற்றியை அவர் பெற்றுத் தருவார்.
கடைசி ஈழப் போரில் வெற்றி நமக்கு கிடைக்கும். தென்னிலங்கையில் எல்லா சிங்கள வீடுகளிலும் ஒப்பாரி ஒலி கேட்கும். ஏழேழு ஜென்மத்திற்கும் சிங்களவர்கள் தமிழர் தாயக பூமியை தொடக் கூட எண்ண மாட்டார்கள். உலகின் கண்கள் திறக்கப்படும். உலக நாடுகள் அனைத்தும் பேச்சு வார்த்தை என்று வலிய ஓடி வருவார்கள். அங்கீகாரம் தருவார்கள்!
புற நானூறு கண்ட ஒரு வீர இனத்திற்கு ஈழத்தை போரில் வென்றெடுப்பதுதான் பெருமை. பிறர் வந்து தங்க தாம்பாளத்தில் விடுதலையை வைத்து தருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்காமல் அனைவரும் தேசியத் தலைவருடைய கரங்களை வலுப்படுத்த வேண்டும். போரில் இறங்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் தாகம் தணியும். சுதந்திர ஈழம் அப்போதுதான் மலரும்!
-தமிழகத்திலிருந்து ஒரு குரல்!
வெளியீடு: தமிழ்வின்
Monday, March 16, 2009
Subscribe to:
Posts (Atom)